news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 11 January 2017

நமது அமைப்பு சார்பாக 10.1.17 அன்று முதன்மைக்கல்வி அலுவலரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள்



      2017ல் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான எமது அமைப்பின் பொதுக்குழுத் தீர்மானங்கள் தங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

1.செய்முறைத்தேர்வில் கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பெயர் விடுதல் செய்யப்பட்டிருந்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை செய்முறைத் தேர்வுக்கு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பின்னரே பதின்மப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்

2. அரசுப்பள்ளிகளுக்கு பதின்ம பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் தமிழ்வழி தேர்வுகளை நடத்த சிரமப்படுவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பணிபுரியும் ஆசிரியர்களேயே அரசுப்பள்ளிகளுக்கு புறத்தேர்வாளர்களாக நியமிக்கவேண்டும்.

3.செய்முறைத்தேர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு நியமிக்கப்படவேண்டும். 

4.தாவரவியல், விலங்கியல் தனித்தனியாக உள்ள பள்ளிகளுக்கும் அதிக மாணவர்கள் உள்ள உயிரியல் பிரிவு உள்ள பள்ளிகளுக்கும் தாவரவியல், விலங்கியல் தனித்தனியாக முதுகலை ஆசிரியர்கள் புறத்தேர்வாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.                                                                                                                 

5.அரசுப் பொதுத் தேர்வுக்கான பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது 15 கி.மிக்குள் நியமிக்கப்பட வேண்டும்
            6.
துறை அலுவலர், பறக்கும் படை உறுப்பினர் நியமனத்தின் போது பதவிமூப்பு அடிப்படையில் நியமித்தல் வேண்டும்.          .
            7.
பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களையே நியமிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.
 
           8. உடல் நலக்குறைவு போன்ற உரிய காரணங்கள் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.

                    மேல்நிலை பொதுத்தேர்வு சிறப்பாக நடைபெறவும் இடர்பாடுகளை களையவும் எமது அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .