news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 18 December 2016

ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் : பள்ளி கல்வித்துறை.

 பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், “தற்போது அரையாண்டு தேர்வு நடைப்பெற்று வருகிறது. 23-ந் தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான வழக்கமான விடுமுறையாகும் இது. இந்த விடுமுறை நாட்களை குறைக்கவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்த உடன் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


தமிழக முதல்வர் மறைவையொட்டி அளிக்கப்பட்ட ஒரு நாள் அரசு விடுமுறை, வார்தா புயல் விடுமுறையால் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ் முதல் தாள் மற்றும்
தமிழ் இரண்டாம்  தாள் ஆகிய 2 தேர்வும் நடைபெறவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்த உடன் அந்த தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்களை குறைக்காமல் சிறப்பு வகுப்புகள் மூலம் இதனை ஈடு செய்வோம். தற்போது எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். மரங்கள் விழுந்து இருந்த போதிலும் வகுப்பறைகளில் எந்தவித பாதிப்பும் கிடையாது.என்று தெரிவித்தார்.