news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 7 December 2016

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா  உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு  09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.

     07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று  நடைபெறவிருந்த 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல் வாரம் நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு