news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 28 December 2018

நமது அமைப்பின் பொதுச் செயலாளரின் செய்தி

அனைவருக்கும் வணக்கம்.
 ஒரு தலைவன் தான் இருந்த முதுகலைஆசிரியர் பணித் தொகுதிக்கும், இன்றைக்கு உள்ள தலைமை ஆசிரியர் பணித்தொகுதிக்கும் உண்மையாய்  உழைத்திருக்கிறேன், உழைப்பேன் என்று உறுதி கொண்டு இன்று ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளார். இது நாள் வரை சரியாய் முடிவெடுக்கும் தலைவன் இன்று எடுத்திருக்கும் முடிவு தவறாகவா போய்விடும். நாமும் மாநிலத் தலைவர் அவர்களை ஒரு தீர்க்கதரிசி என்று தானே முதுகலை ஆசிரியர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் திட்டமிடச்  செய்தோம்.
தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற நம் முதுகலை ஆசிரியர்கள் எந்த ஓர் அமைப்பிலும் சேராமல் தலைவரின் வருகைக்காக காத்திருந்த நிலையிலும், தலைமை ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்திடவும் , தலைமை ஆசியர்களின் சுயமரியாதையையும்  காப்பாற்றினால்தான் மேல் நிலைக் கல்வியில் ஆசிரியர்களுக்கென்று மரியாதையை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையில்தான் தன்னலமற்ற சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்துள்ளார்.
இரு முறை 2010, 2014-லும் வந்த தலைமை ஆசிரியர் பணி உயர்வினை துறந்தது மு.க.ஆ க்காகத்தானே.2018ல் வந்த பதவி உயர்வினை ஒத்திப் போட வேண்டாம்.ஒய்வுக்கால பலனாக இருக்கட்டும் என்று நாம் தானே நம்முடனேயே இருக்கக் செய்தோம். 2010ல் தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றிருந்தால் இன்றைக்கு இருக்கும் அனைத்து அமைப்புகளிலும் மூத்தவராக இவர்தானே இருந்திருப்பார். யோசிக்கவும். நமக்காக இழந்தது தானே யாவும்.

1990 ஆண்டிலே அமைப்பிற்கு வந்தவர் , 2006 ஆண்டு தலைமைப் பதவிக்கு வந்து பெற்றுத் தந்த சாதனைகளை ,உரிமைகளை வேறு எந்த அமைப்பின் தலைவனும் நம் பணித்தொகுதிக்கு பெற்றுத் தந்தது இல்லை. ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது கிடையாது. அப்படிப்பட்ட நிலைதான் தலைமை ஆசிரியர்களுக்கான அமைப்பை உருவாக்க வைத்தது.
போராட வேண்டும் , வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும் , இறுதிவரை போராட வேண்டும் என இருப்பவனே தலைவன். அவர்தான் மணிவாசகன். நான் கூறியதில் 1% கூட உங்களுக்குள் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
ஏற்கனவே உள்ள த ஆ அமைப்பின் தலைமையிடம் போராட்டக் காலத்தின் போதும், சாதாரண நிலையிலும் பேசிப் பார்த்தாலும் தலைமை ஆசிரியர்களுக்கு என்று எந்த விதமான போராட்டமும் நடத்த முன்வராத தலைமை, தனிச் சங்க போராட்ட வரலாறே இல்லாத அமைப்பாய் உள்ள நிலையில்தான் தலைமைஆசிரியரின் தன்மானம் காக்க 
வந்ததுதான் இந்த புதிய அமைப்பு.
2009ல் நம்முடன் சேர்ந்து நடத்திய போராட்டத்தின் மூலம் தான் 30.1.2009 ல் நடந்திட்ட பேச்சுவார்த்தையின் மூலம் பெற்றது தான் PA , SR , 
35/40 DE0 இம் மூன்றும் தலைமை ஆசிரியருக்கானது. தனியான சாதனை ஏதும் இதற்கு பின்னர் இல்லை.
2011 ல் மேல்நிலையில் உள்ள 3அமைப்புகளும் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான் இணைந்த போராட்டம்.தலைவரின் யோசனைப்படி போயிருந்தால் அன்றைய பேச்சுவார்த்தையிலேயே விடைத்தாள் உழைப்பூதியம் ரூ.10/= பெற்றிருக்கலாம். தலைமை ஆசிரியர்களின் நிலையில்லாத தன்மைமையால் தான் நாம் நமக்கான உரிமையை இழந்தோம். இந்த அனுபவத்தில் தோன்றியது தான் தலைமை ஆசிரியருக்கான இவ்வமைப்பு .
நம் மாநிலத் தலைவரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் 20 மாவட்டங்கள் , 110 தலைமை ஆசிரியர்கள் என திருச்சியிலே திரண்டனர். இவர்களுக்கான நம்பிக்கையை ஏமாற்ற முடியுமா? தன்னலம் கருதாமல் , தனக்கு இன்னும் பணிப்பளு அதிகரிக்கப் போகிறது என்றும் , மன அழுத்தம் அதிகரிக்கும் என்று தெரிந்தும் தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை ஏற்க முடியும் என்றால் நம் மாநிலத் தலைவர் 
திரு வே மணிவாசகன் அவர்களால் மட்டுமே முடியும் என்பது வெள்ளிடைமலை உண்மை.
தாய்க் கழகம் மற்றும் முதன்மைக் கழகத்திடம் இருந்து உருவாகியிருக்கும்  அமைப்புதான் தலைமை ஆசிரியர் கழகம் எனும் குழந்தை. இரண்டையும் பாதுகாக்கும் வல்லமையும் பொறுப்பும் உணர்ந்தவர் தான் தலைவர் என்பதை அனைவரும் உணர்வோம்.
உணர்ந்தோம்.
உணர்வால் இணைவோம். நன்றி.
இரா.பிரபாகரன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் .