news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 15 September 2016

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவோடு ஜாக்டோ சந்திப்பு




தோழர்களே...தோழிகளே .. வணக்கம். இன்று காலையில் ஜாக்டோ உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கமான விவாதங்கள்...மாலை 3.00 மணிக்கு தலைமைச் செயலக அழைப்பு.. ஆனால் 5.15 க்குத் தான் அழைப்பு வந்தது. இன்று கலந்து கொண்ட 18 சங்கங்களின் பொறுப்பாளர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம்... திருமதி.சாந்தா ஷீலா நாயர் தலைமையில் உள்ள குழுவோடு பேச்சைத் தொடங்கினோம். அவர்கள் தெளிவாக இருந்தார்கள்... தன் பங்களிப்பில் ஏதாவது மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... பழைய ஓய்வூதியத் திட்டம் என்பதனை தொடரக் கூடிய சூழல் - நிதிநிலை மிக மிக மோசமாக உள்ளது என்பதனைச் சொன்னார்கள். அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பழைய ஓய்வூதிய நன்மைகள் - அதனால் குடும்பப் பாதுகாப்பு என பல நிகழ்வுகளை வரிசைப் படுத்தினார்கள்... ஆனாலும் இடை இடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் குழு கேட்டுக் கொண்டே இருந்தது... இதில் உள்ள குறைபாடுகளையும் எடுத்து வைத்தோம்.... 30 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடந்தது.... முடிவு என்ன ? முழுத் தோல்வியும் இல்லை... முழு வெற்றியும் இல்லை.... தலைவரே பிறகு என்ன எனக் கேட்பீர்கள்... குழு அறிக்கையை வெளியிடும் .... அதன் பிறகு களம் காண வேண்டும் என்றால் களத்தில் நமது பணிகளைத் தொடர வேண்டியது தான்... மணிவாசகன்.