news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 12 August 2016

.உயிரியல் பணியிடத்திற்கு தாவரவியல் (அ) விலங்கியல் முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்- மாநிலத்தலைவர் தகவல்

இன்று பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் மேநிக ஆகியோரைச் சந்தித்தோம்.உயிரியல் பணியிடத்திற்கு தாவரவியல் (அ) விலங்கியல் முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம் என உறுதி அளித்தார்கள். மென்பொருளும் அதற்கு ஏற்றாற்போல் சரிசெய்யப்படும்... கலந்தாய்வின் போது முன்னுரிமையில் உள்ளோர் முதலில் காட்டப்படும் இடங்கள் சரியில்லை என்றால் மீண்டும் ஒருமுறை வாய்ப்புத் தர கேட்டுள்ளேன்...99% விழுக்காடு அதுவும் நிறைவேறும் என நம்பிக்கை கொள்ளுங்கள். ஏன் 1% என்றால் அதுவும் மென்பொருள் இடையூறுதான்... மாறி மாறி இதனை பின்பற்றினால் நீண்ட நேரம் கலந்தாய்வு இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என தன் கருத்தினை இயக்குநர் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்... அனைத்து காலிப்பணியிடங்களும் கலந்தாய்வின் போது மறைக்காமல் காட்டப்படும் என இயக்குநர் அவர்கள் உறுதியளித்தார்... அனைவருக்கும் தெரியப்படுத்தவும். மணிவாசகன்.