news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 15 December 2015

பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், பள்ளிகளில் சூழ்ந்த வெள்ள நீர் சீர்ப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்படத் துவங்கியுள்ளன.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள், சீருடைகள் தயாராக உள்ளது. வகுப்பறையில் பழுதடைந்த நாற்காலிகள், மேசைகள் மாற்றப்பட்டுள்ளன. பள்ளிகளில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி குறைந்தபட்ச பாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்