news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 11 December 2015

வெள்ள பாதிப்பால் தள்ளிப்போகுமா பொதுத்தேர்வும் தேர்தலும்? -தி இந்து நாளிதழ்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலும், மாணவர் களுக்கான பொதுத்தேர்வும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரி களுக்கு 30 நாட்களுக்குமேல் விடுமுறை விடப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் டிசம்பர் இறுதி வரை இருப்பதால் இன்னும் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஓராண்டில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 220 நாட்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 200 நாட்களும் கண்டிப்பாக இயங்க வேண்டும். எதிர்பாராதவகையில் விடுமுறை விடப்பட்டால், அது சனிக்கிழமைகளில் ஈடுகட்டப்படும்.
கனமழை காரணமாக கடந்த 7-ந் தேதி தொடங்கவிருந்த அரை யாண்டுத் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜனவரி யில் அரையாண்டுத் தேர்வுகளை நடத்தினால், பொதுத்தேர்வுக்கு 2 மாதமே இடைவெளி இருக்கும். எனவே, அரையாண்டுத் தேர்வுக் குப் பதில் நேரடியாக இறுதித் தேர்வை நடத்தலாம் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது. இந்த யோசனையை ஆசிரியர்கள் வரவேற்றாலும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விமர்சனமும் உள்ளது.
இதுகுறித்து அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் வே.மணிவாசகன் கூறும்போது, ‘‘மழை விடுமுறையால் பள்ளி வேலை நாட்கள் குறைவாகத்தான் உள்ளன. எனவே, அரையாண்டுத் தேர்வை ரத்துசெய்துவிட்டு நேரடி யாக ஆண்டு இறுதித்தேர்வை நடத்திவிடலாம்’’ என்றார்.