news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 6 July 2015

பணி நியமனம் செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு, பணிவரன் முறை வழங்காத மேல்நிலைக் கல்வித்துறை இணை இயக்குநரைக் கண்டித்து, வரும் 17-ஆம் தேதி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு .

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 2010 முதல் 2015 மார்ச் வரை ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டு, ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு, பணி நியமன ஆணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பணி வரன்முறை ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், பணி நியமனம் செய்யப்பட்ட, ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கான எந்த அடிப்படை உரிமைகளையும் பெற முடியாமல், மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனுப்பி உள்ள ஒரு சில பணிவரன் முறை ஆணைகளிலும், தேதி மற்றும் ஆண்டில் குளறுபடி காணப்படுகிறது.

கடந்த 2010 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு முறையான பணிவரன் முறை ஆணை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு பலமுறை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பணிவரன் முறை ஆணை பற்றி கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதால், மேல்நிலைக் கல்வி இணை இயக்குநரைக் கண்டித்து, ஜூலை 17-ஆம் தேதி  மாவட்ட தலைநகரங்களில்  முதன்மைக் கல்வி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.