news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 8 May 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆறு அரசுப் பள்ளிகள் உள்பட 69 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

மாவட்டத்தில் 276 மேல்நிலைப் பள்ளிகளில் 37 ஆயிரத்து 143 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 34 ஆயிரத்து 495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.87 சதவீதமாகும். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட 0.53 சதவீதம் அதிகம். மதுரை கல்வி மாவட்டம் 92.99 சதவீத தேர்ச்சி, மேலூர் கல்வி மாவட்டம் 91.69 சதவீத தேர்ச்சி, உசிலம்பட்டி கல்வி மாவட்டம் 94.52 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

 நூறு சதவீத தேர்ச்சி: மதுரை மாவட்டத்தில் 6 அரசு மேல்நிலைப் பள்ளிகள் (மதுரை ஒத்தக்கடைபெண்கள் மேல்நிலைப்பள்ளி , இ.மலம்பட்டி, எழுமலை(ஆண்கள்), பி.அம்மாபட்டி, செங்கப்படை, தனியாமங்கலம் )நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

 7 அரசு உதவிபெறும் பள்ளிகள்: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன், தெற்குவாசல் நாடார் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என் மெட்ரிக் பள்ளி, நாகமலைபுதுக்கோட்டை சிறுமலர் பள்ளி, பாப்பநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயா பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி, தெப்பக்குளம் தியாகராசர் பள்ளி., மற்றும் சுந்தர்ராஜன்பட்டி பார்வையற்றோர் பள்ளி உள்பட மொத்தம் 69 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

 சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.சந்தோஷ் மாவட்ட அளவில் முதலிடத்தையும், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.அட்சயா இரண்டாம் இடத்தையும், சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மற்றொரு மாணவர் வி.ஜோதிசரண் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.