news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 12 April 2015

உயிரியல் மதிப்பீட்டு பணியில் உள்ள குறைபாடுகளும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்


  தமிழ்  நாட்டில் ஏறத்தாழ 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அதில் அரசு ஒதுக்கீடு 2650 இடங்களும் ,அதில் அனைத்து இந்திய ஒதுக்கீடு 15% போக 2256 இடங்களும் ,தனியார் கல்லூரிகளில் 838 இடங்கள் சேர்த்தால் தோராயமாக 3094 இடங்களே உள்ளன. அதே சமயம் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகம். தோராயமாக் 236000 இடங்கள் உள்ளன. இதில் ஆண்டாண்டுக்கு நிரம்பாமல் போவது 70000 ,80000 என்பது தனிக்கதை. இந்த 3094 இடங்களுக்குள் வருவதற்கு கட் ஆப் 197 அல்லது 198 ல் நின்று விடுகிறது. பொறியியல் கல்லூரிக்கு தேர்ச்சி அடைந்தாலேபோதும்.
       மதிப்பெண்ணை எடுத்துக் கொண்டால் இயற்பியல், வேதியியல் பாடங்களில் 300,400 பேர்,கணிதத்தில் 1000, 2000 பேர்  200க்கு 200 எடுப்பர். மருத்துவம் படிக்க உயிரியல் மதிப்பெண்ணை 2 ஆலும் , இயற்பியல், வேதியியல் மதிப்பெண்ணை ஆலும் வகுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு உயிரியல் மதிப்பெண்ணும் மாணவனுக்கு முக்கியம்.


விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் தற்போது காலை மற்றும் மாலை 40 விடைத்தாள்கள்.ஒரு உயிரியல் தாவரவியல், உயிரியல் விலங்கியல் ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது (75 மதிப்பெண் என்பதால் அது ஒரு நாளைக்கு 20 என கணக்கில் கொள்ளப்படுகிறது). மற்ற பாடங்களில் விடைத்தாள் பதிவுகள்  24 முறை செய்யப்படுகிறது என்றால் உயிரியலில் 40 முறை செய்யவேண்டும். ஒரு உயிரியல் தாவரவியல், உயிரியல் விலங்கியல் 22+22 பக்கங்கள் கொண்டது. உயிரியல் தாவரவியல்  சராசரியாக 18 பக்கங்கள் எழுதி  உள்ளனர்.

உதவி மதிப்பீட்டாளர் ஒரு விடைத்தாளை திருத்துவதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும் .40 விடைத்தாளையும்  திருத்த 12 மணி நேரமாகும். அதேபோல்  முதன்மை மதிப்பீட்டாளரும் ,கூர்ந்தாய்வாளரும் ஒவ்வொரு விடைத்தாளையும் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் சரிபார்க்கவேண்டும் ஒரு விடைத்தாள் திருத்தியதை சரிபார்க்க 3 நிமிடங்கள் எனக் கணக்கிட்டால்   40 தாள்களுக்கு 120 நிமிடங்கள். ஒரு உதவி மதிப்பீட்டாளர்க்கு 120 நிமிடங்கள் என்றால் 6 பேருக்கு 720 நிமிடங்கள். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் எப்படி சாத்தியம்

. உயிரியல் தாவரவியல், உயிரியல் விலங்கியல் ஆசிரியர்கள் கட்டுகளை பரிமாறிக் கொள்ளவேண்டும்  இதனால் காலை 8.30 மணி முதல் மாலை 8 மணி வரை திருத்தினால் மட்டுமே ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்ட 40 விடைத்தாள்கள்(அவர்கள் கணக்கில் 20 விடைத்தாள்கள் ) திருத்த முடியும். இதெல்லாம் சாத்தியமா ?  தவறு ஏற்பட வாய்ப்பு அதிகம். இருந்தாலும் இந்த கடின பணியை நம்மவர்கள் சாத்தியமாக்கி கொண்டிருக்கிறார்கள்.தங்கள் உடலை வருத்திக்கொண்டு.   ஒவ்வொரு முறையும் மதிப்பீட்டு  'feed back' ல் கேட்கிறார்கள் எழுதுகிறோம்.. எதுவும் மாறவில்லை.

பல நல்ல மாற்றங்கள் செய்த தேர்வுத் துறை இயக்குனர் அவர்கள் கவனத்துக்கு செல்லவேண்டும்  எனக் கருதுவதால் இந்த கோரிக்கை   

இந்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவிட்டால் அடுத்த முறை விடைத்தாள் திருத்துவதை புறக்கணிப்பது என்ற நிலைக்கு உயிரியல் ஆசிரியர்கள் செல்வதை தவிர வேறு வழியில்லை என்பதை உணரவேண்டும்  
 மதிப்பீட்டு மையங்களில் விடைத்தாள் திருத்துவதில் சிறப்பாக  இருக்க வேண்டுமெனில் ,  .

ஒரு முதன்மை மதிப்பீட்டாளருக்கு கீழ் 3 உதவிமதிப்பீட்டாளர்கள்  மட்டுமே திருத்த வேண்டும்.

Ø  முதன்மை மதிப்பீட்டாளர் , கூர்ந்தாய்வாளர் எண்ணிக்கை உயர்த்தப் பட வேண்டும்.

Ø  அனைவருக்கும் மதிப்பீட்டு ஊதியம் சமமாக (8 கி .மி. வரையறை இன்றி FLAT RATE) வழங்கப்படவேண்டும்

Ø  விடைத்தாள்கள்  நாள் ஒன்றுக்கு இயற்பியல், வேதியியல் போன்று 24 தர வேண்டும்.

Ø  உயிரியல் தாவரவியல், உயிரியல் விலங்கியல்  விடைத்தாள்  மதிப்பீடுக்கு ரூபாய் 10 தனித் தனியே வழங்கப்படவேண்டும்.

                         பீலி பெய்  சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
                         சால மிகுத்துப் பெயின்.



நகல்  எடுத்து மதிப்பீட்டு மய்யங்களில் feedback ல் உயிரியல்  AE,SO,CE  அனைவரும் கையெழுத்திட்டு கொடுக்கவும். நன்றி. மற்ற மாவட்டங்களுக்கும் சொல்லவும். நம் இணையத்திலும் உள்ளது.                                        .
-பு.சரவணக்குமரன், மாவட்டப் பொருளாளர், TNHSPGTA ,தேனி மாவட்டம்.