news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 2 October 2017

ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பினர் உடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை

 ஜாக்டோ-ஜியோ- GREAF அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது (02.10.2017 -12.00 மணி முதல் 1.00 மணி வரை) ஆலோசனை நடத்தி முடித்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய  மாநிலத் தலைவர் திரு.இரா.சண்முகராஜன்,தலைமைச் செயலக சங்க தலைவர் திரு.ஜெ.கணேசன், தொடக்கப் பள்ளி  ஆசிரியர் கூட்டனி தலைவர் திரு.பெ.இளங்கோவன் |தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரிஆசிரியர்கழகத் மாநிலத் தலைவர் மணிவாசகன், த.நா. அ.அலுவலக உதவியாளர் (ம) அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் திரு.கே.க கணசன், த.நா. அரசு அனைத்துத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் திரு. அ. ஜ.பாலமுருகன், உள்ளிட்ட ஆசிரியர்  அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.  7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துதல், மற்றும் உடனடி தீர்வாக இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும், Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது