news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 20 June 2016

பள்ளிக்கல்வி - 2015-16ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

ஒவ்வொரு ஆண்டும், செப்., 5ல் ஆசிரியர் தினத்தன்று அவர்களை கவுரவிக்கும் வகையில், சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2015-16ம் கல்வியாண்டுக்கான நல்லாசிரியர் தேர்வு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில், முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்டு, டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., ஐ.எம்.எஸ்., ஏ.இ.ஓ., மற்றும் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உட்பட, ஆறு பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வு பணிகள், ஜூன் 5 முதல் ஜூலை 15 வரை பள்ளிகளில் நேரடியாக மேற்கொள்ளவும், ஆய்வின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு, ஜூலை 20 முதல் 30 வரை நேர்காணல் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி மாவட்டத்துக்கு, ஆறு பேர் வீதம் நல்லாசிரியர்கள் தேர்வு செய்து, ஆக., 10க்குள் பரிந்துரைக்க மாவட்ட தேர்வு குழுவுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
CLICK HERE-TO DOWNLOAD STATE BEST TEACHERS AWARD PERFORMA

CLICK HERE-GO.218 SCL EDN DEPT DATED.05.07.2013 - TEACHERS AWARD SELECTION GUIDELINES