news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 1 September 2015

அக்.8ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்; ஜாக்டோ கூட்டத்தில் முடிவு

ஜாக்டோ மாநிலஉயர்மட்டக்குழு கூட்டம் 30.08.2015 காலை 10 மணியளவில் திருச்சியில் திருச்சி சேவா சங்க மகளிர்மேல்நிலைப்பள்ளியில் கூடியது.கூட்டத்திற்கு சுழற்சி முறையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் பாவலர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் அவர்களும்,தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுசெயலர்.திருமிகு எத்திராஜ் அவர்களும் கூட்டுத் தலைமை யேற்று நடத்தினர்.
ஜாக்டோவில் உள்ள 24 சங்கங்களில் 19 சங்கத்தை  சார்ந்த   மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .இக்கூட்டத்தில் நமது அமைப்பின்  சார்பில் மாநிலப் பொதுச் செயலர் திரு.இரா.பிரபாகரன்  அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்ட முடிவுகள்
ஜாக்டோவின் 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 8 ம் தேதியன்று அனைத்துபள்ளிகளையும் மூடி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்ஈடுபடுவது என்றும் அதில் அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவாற்றியது
மேலும் அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு மாவட்டத்தலைநகரில்,ஆட்சியர் அலுவலகம் முன்பு,அல்லது மாவட்ட ஜாக்டோ முடிவெடுக்கும் இடத்தின் முன்பு திரளான ஆசிரியர்கள் அனைவரும் கூடிஒருமணி நேரம் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என்றும் முடிவாற்றியது.
இது சார்பாக மாவட்டதலைநகரில் ஏற்கனவே செயலாற்றி வருகின்ற மாவட்டஜாக்டோ தொடர்பாளர்கள் தலைமையில் 20.09.2015 ஞாயிறு அன்று ஆயத்தக்கூட்டம் கூட்டுவது என்றும் அதில் அனைத்து இயக்கம் சார்ந்த,மாநில, ,மாவட்ட வட்டம் மற்றும் ,வட்டார /நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ஒருநாள் வேலை நிறுத்தம் வெற்றிபெற ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் முடிவாற்றியது.
20.09.2015 முன்பாக மாவட்ட ஜாக்டோ உயர்மட்டக்குழு க்கூட்டம் மாவட்ட ஜாக்டோ தொடர்பாளர்கள் மூலம் கூட்டப்பட்டு,அதில் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக்கூட்டமுடிவுகள் பற்றிய விளக்க உரை நிகழ்த்திஆயத்தப்படுத்துவது எனவும் முடிவாற்றப்பட்டது
அக்டோபர்-8 அடையாள வேலை நிறுத்தபோராட்டத்திற்கான சுவரொட்டிகள் மாநில ஜாக்டோ அமைப்பின் மூலமாக அச்சிட்டுவழங்குவது என்றும்,துண்டறிக்கைகள் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில்.மாவட்ட ஜாக்டோஅமைப்பு அச்சிட்டு ஆசிரியர்களிடம் வழங்குவதுஎனவும் முடிவாற்றப்பட்டது.
ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது