news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 21 July 2017

மாநிலத் தலைவர் கல்விச் செயலருடன் சந்திப்பு - தலைவர் செய்தி

நமது மாண்பமை செயலர் அவர்களை சனிக்கிழமை அன்று சந்தித்து 25 நிமியங்கள் கோரிக்கைகள் சார்ந்து பேசினேன். முதன்மையான முக்கியமான கோரிக்கையாக 01-6-09 முதல் கடந்த ஊதியக் குழுவால் பாதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களின் நிலை பற்றி பேசினேன். 8 ஆண்டுகள் கடந்து விட்டனவே எனக் கூறினார். நான் 2011 மார்ச் தேர்வுப் புறக்கணிப்பை பற்றிச் சொன்னேன். 2011 முதல் 2016 வரை எதையும் கண்டு கொள்ளாத நிலை தமிழகத்தில் இருந்ததைப் பற்றியும் பேசினேன். 400 பேர் மொட்டை அடித்துக் கொண்டு 2500 முதுகலை ஆசிரியர்களோடு கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றதையும் கூறினேன். பள்ளிக் கல்வித் துறையில் நாம் எவ்வாறு கடந்த ஊதியக் குழுவில் பாதிக்கப் பட்டுள்ளோம் என்பதனை அட்டவணையோடு விளக்கினேன்.... அடுத்து உயிரியல் ஆசிரியர்களுக்கான தனித்தனி பணியிடம் - தமிழ், ஆங்கிலம் மற்றும் வணிகவியலுக்கான கூடுதல் பணியிடங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசினேன்... இவைகள் உடனடியாக சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்... நமது அமைப்பின் வழக்கால் 1600 கூடுதல் பணியிடங்கள் கிடைத்துள்ளன. இவைகளோடு சேர்த்து 3400 முதுகலை ஆசிரியப் பணியிடங்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ளதைக் கூறி அதனோடு மேலும் கூடுதலான பணியிடங்களை உருவாக்க தயாராக உள்ளேன் எனவும் உறுதி அளித்தார்... தற்காலிக ஊதியம் பெறும் நிலையைப் பற்றி பேசினோம். தற்போது உடனடியாக 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றார்.ஒவ்வொரு மாநில - மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் முதுகலை ஆசிரியத் தோழர்களும் செய்ய வேண்டியது என்னவென்றால் தற்காலிக ஊதியத்தில் உள்ள பணியிடங்களுக்கான அரசாணை நகல்களை உடனடியாக நமது சென்னை அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... அனுமதியின்றி உயர்கல்வி படித்தோர்களுக்கு  பின்னேற்பு வழங்குங்கள் எனக் கேட்டுள்ளேன். அதனைக் கட்டாயம் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்....- மாநிலத் தலைவர்