news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 18 June 2017

அரசுப் பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டம் வெளியீடு: விளையாட்டு, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்

தனியார் பள்ளிகளைப் போலவே அரசு பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டிய நிகழ்வுகள், தேர்வு தேதிகள் உள்ளிட்ட செயல்திட்டங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் அட்ட வணையை வழங்கும். அரசுப் பள்ளிகளில் இதுவரை அது போன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான நடப்பு கல்வியாண்டுக்கான செயல் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இந்த செயல்திட்டத்தில் பள்ளி வேலை நாட்கள், எந்தெந்த நாளில் எந்தெந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், செஞ்சிலுவை சங்க செயல்பாடு, நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகள் ஆகியவற்றை எப்போது செய்ய வேண்டும், என்ன செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட விவரங் கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக விளையாட்டு தொடர்பான நிகழ்வு களுக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்வு களுக்கும் செயல்திட்ட அட்டவணையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளை நடத்தும் தேதி, மரம் நடும் விழா நடத்தும் தேதி, கலை நிகழ்ச்சிகள் நடத் தும் தேதி, தேர்வுகள் நடை பெறும் தேதி ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சனிக்கிழமைகளில் பள்ளி
இதுவரை அனைத்து சனிக் கிழமைகளிலும் அரசுப் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் பல சனிக்கிழமைகளில் பள்ளி நடைபெறும் என்று செயல்திட்டத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை களில் கூட்டு உடற்பயிற்சி வகுப்பு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர பள்ளி தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் தேதிகளும் அட்டவணையிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்ட செயல் திட்டத்தின்படி, 2017-18 கல்வி யாண்டில் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. 3 நாட்கள் ஈடு செய்யும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அனுமதிக்கப்பட்டு உள்ளது.