பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Wednesday, 26 April 2017

தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


''01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

மாநிலத் தலைவர் செய்தி

தோழர்களே தோழிகளே இன்று நமது பள்ளிக் கல்வித் துறை செயலர் மாண்பமை உதயசந்திரன் அவர்களை சந்தித்தோம்... மேனிலைக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல்வேறு காரணிகளைப் பற்றி பேசினோம்... மேனிலைக் கல்வி மேம்பட 200 % எமது அமைப்பு தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தேன்.... இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற அனைத்து வகையிலும் எமது முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு உறுதுணையாக இருப்பார்கள் என உறுதி கூறினேன்... நமது செயலர் அவர்களும் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.... விடைத்தாள் உழைப்பூதிய அரசாணை வெளியிடப்பட இருப்பதை தெரிவித்தார்... விடைத்தாட்களுக்கு நிலுவைத் தொகையோடு வழங்க அரசாணை 270 வெளியிடப்பட உள்ளதை எடுத்துக் கூறினார்.... அரசாணை 270 அய் பார்க்கும் போது கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்புதிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு செயலரிடம் தெரிவிக்கப்பட்டது.... அவர்களும் சரிசெய்து தருவதாக உறுதி அளித்தார்.... நான் மாநிலத் தலைவராக பொறுபேற்ற 2006-ல் நிலுவைத் தொகை பெற்றுத் தந்தேன். இன்றும் நிலுவைத் தொகை பெற உள்ளோம்... இது எவராலும் நிகழ்ந்தது அல்ல.... நமது உண்மையான போராட்டங்களினால் உழைப்பினால் பெற்றது.... இதனை மற்றவர்களோடு பகிரவும்.. மணிவாசகன்..
மேலும் மே 19-க்கு முன்பே தரம் உயர்த்தப்பட இருக்கும் 100 மேனிலைப் பள்ளிகளை அறிவிக்க முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டேன்.... மாண்பமை செயலர் அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.... அவ்வாறு இக் கோரிக்கை நிறைவேறினால் இதுவும் ஒரு வாலாற்று நிகழ்வாக அமைந்து விடும்.... சுமார் 500 மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் தற்போது காவியாக உள்ளன. 100 பணியிடங்iகளைச் சேர்த்தால் 600 ஆக அமையும்... 900 முதுகலை ஆசிரியப் பணியிடங்களும் கூடுதலாக கிடைக்கும்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* மாறுதல் விண்ணப்பங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி  முதல் மே 5 ஆம் தேதி வரை வழங்கலாம்.

* பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு மே 19 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை நடைபெறும்.

* கலந்தாய்வு Online மூலமாக நடைபெறும்

Wednesday, 5 April 2017

மாநிலத் தலைவரின் அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம். சற்று முன் நமது மாண்பமை பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்கள் எனை கைபேசியில் தொடர்பு கொண்டார்கள். விடைத்தாட்களை குறைத்ததற்கு முதலில் நன்றி சொன்னேன். உழைப்பூதியங்கள் உயர்வு தொடர்பாக பேசினேன்... அவர் உடனே இன்றோ (அ) நாளையோ அரசாணை வெளியிடப்படும் என்றும் போராட்டம் தேவையில்லையே என்று கூறினார். நமது செயலர் அவர்களே கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை திரும்பப் பெறுகிறேன் என கூறினேன்... எனவே, தோழர்களே தோழிகளே நாளைய நமது விடைத்தாட்கள் திருத்தும் பணி திரும்பப் பெறப்படுகிறது.. களம் காண தயாராக இருந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்... மணிவாசகன்.

Monday, 3 April 2017

02.04.2017 அன்று திருச்சியில் அவசர மாநில செயற்குழு கூட்டம்




02.04.2017  அன்று திருச்சியில் அவசர மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது... அதில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 (1). விடைத்தாட்கள் எண்ணிக்கையை 10 + 10 எனவும் மொழிப் பாடங்களுக்கு 13+13 எனவும் குறைக்க 20.02.17 அன்று தேர்வுகள் துறை இயக்குனரோடு நடந்த பேச்சு வார்த்தையில் ஒத்துக் கொள்ளப்பட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியும்
 ( 2 ) . ஏற்றுக் கொள்ளப்பட்ட தேர்வுகள் உழைப்பூதியம் மற்றும்  விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.15/-  ஆகிய கோரிக்கைகள் சார்ந்த அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும்
 ( 3 ) . முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றாமல் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றுபவர்கள் +2 விடைத்தாள் நடுவத்திற்கு முகாம் அலுவலராக  பணியாற்றக் கூடாது எனவும் அதற்கு பதிலாக மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை முகாம் அலுவலராக நியமிக்க வேண்டும் எனவும் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியதோடு அவைகள் சார்ந்து தேர்வுகள் துறை உடனடியாக முகாம் அலுவலர்களுக்கு தெளிவுரை வழங்க வேண்டும் எனவும் உழைப்பூதியத்திற்கான அரசாணையை உடனே பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற 05.04.17 அன்று தொடங்க உள்ள விடைத்தாட்கள் திருத்தும் பணியை முதன்மைத் தேர்வாளர்களும் கூர்ந்தாய்வு அலுவலர்களும் விடைத்தாட்களை பெற்றுக் கொண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது