பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Sunday, 22 May 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கடந்த 11.5.16 அன்று மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது

1) மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு செய்முறைத்தேர்வு பிப்ரவரி 2015க்கான உழைப்பூதியம் இன்னும் 41 பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை கடந்த ஆண்டு பலமுறை நினைவூட்டியும் இன்னும் வழங்கப்படவில்லை என்பது தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
2). மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு செய்முறைத்தேர்வு பிப்ரவரி 2016 க்கான உழைப்பூதியம் முன்பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது நிலுவைத்தொகை பல மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3). மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் பல ஆண்டுகளாக கருத்தியல் தேர்வுக்கு ரூ.2ம், செய்முறைத்தேர்வுக்கு ரூ.1ம் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தித்தர வேண்டப்படுகிறது
 மேலும் பல மாவட்டங்களில் தமிழ் ஆங்கில மொழிப்பாடத்திற்கும் பேசுதல், கேட்டல், படித்தல் திறனுக்கு உழைப்பூதியம் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
4).நிலுவையில் உள்ள தகுதிகாண்பருவம் சம்மந்தமாக உள்ள பணிப்பதிவேடுகளை விரைந்து முடித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்