பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது: இன்றும் நாளையும் மறியல் தொடரும்

கோரிக்கைகளை  நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.  ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும்,  தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி ஜனவரி 30, 31, பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு  (ஜாக்டோ) அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஜாக்டோ அமைப்பை  சேர்ந்த உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பக்தவச்சலம், சி.உதயகுமார், ஆர்.பெருமாள்சாமி, சென்னை மாவட்ட  நிர்வாகிகள் சத்தியநாதன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டு  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.  அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அருகில் உள்ள  மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்டங்களில்: இதுபோல மாவட்டங்களிலும் போராட்டம் நடத்திய பல  ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 2 லட்சம் ஆசிரியர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்,  தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.   சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த மறியலில் 3,219 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் நடந்த ஆசிரியர்கள் மறியலின்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு 500 பேர் கைது  செய்யப்பட்டனர்.  தூத்துக்குடியில் 250 பேர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள், திருச்சியில் 707பேர், நாகையில் 1,030பேர்,  தஞ்சையில், 850பேர், புதுக்கோட்டையில் 527பேர், கரூரில் 320 ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரியில் 190 பேர், திருப்பூரில்  1500, ஈரோட்டில் 1735, நீலகிரியில் 334, கோவையில் 950, விழுப்புரம் 800, கடலூர் 400 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, சங்கர பெருமாள்  அளித்த பேட்டி: ஜாக்டோவின் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3  லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தொடர் மறியல்  போராட்டத்திற்கு பிறகும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இறுதி கட்டமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்  நடத்தப்படும். காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10, 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், நாளை தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள்  வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால் அன்றைய வகுப்புகளும் முற்றிலும் முடங்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல்  போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய முரண்பாடு நீக்கவேண்டும், தன் பங்களிப்புத் ஓய்வுதியம் கைவிடவேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ போராட்டம் தொடக்கம்

பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங் கங்கள், கடந்த நான்கரை ஆண்டு களாக இடை நிலை ஆசிரியர் உட்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் படிகள் உட்பட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும், தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கி விட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு அதை கண்டு கொள்ளவில்லை, நிறைவேற்ற வில்லை.
இதையடுத்து, ஜாக்டோ அமைப்பு ஏற்கனவே அறிவித்தபடி, 30, 31, பிப்ரவரி 1ம் தேதி களில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டத்தை இன்று தொடங்குகிறது. இதற்காக 27, 28, 29ம் தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு இயக்கத்தை ஆசிரியர் சங்கங்கள் நடத்தின.
அதில் ஒவ்வொரு ஒன்றிய வாரியாக போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ளபடி பிப்ரவரி 1ம் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடக்கிறது. மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு நடக்கிறது.
இதை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் இயங்காது என்று ஜாக்டோ அமைப்பு தெரி வித்துள்ளது
.

Friday, 29 January 2016

திட்டமிட்டபடி ஜாக்டோ மறியல் போராட்டம் ஜனவரி 30 ல் தொடங்கட்டும்- மாநில பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன் அவர்கள் வேண்டுகோள்

ஜனவரி 30,31 பள்ளி விடுமுறை நாட்களாகும். அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையே.இந்த சூழ்நிலையில் ஜாக்டோ மாநில அமைப்பு எடுத்துள்ள முடிவினை செயல்படுத்தும் வகையில் சடங்கு போன்று இந்த மறியல் போராட்டத்தை நடத்துகின்றோம். கலந்துகொள்பவர்கள் மீது சட்ட ரீதியாகவும் விதிகளின்படியும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.விடுமுறை நாட்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஊதியப் பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.கல்வித் துறையின் மிரட்டலுக்கு அச்சப்பட தேவையில்லை.
31.01.2016 ஞாயிற்றுக் கிழமை மறியல் போராட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக கருதி அன்புடன் அழைக்கின்றோம்.
01.02.2016 திங்கள் கிழமை ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள்,அனைத்து வகை அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சக்தியினையும் அரசுக்கு வெளிக்காட்டுகின்ற வகையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்போம்.ஊதிய பிடித்தம் என்னும் மிரட்டலுக்கு அஞ்ச தேவையில்லை. கோரிக்கைகள் ஒன்றே நம் கண் முன்னால் நிற்கட்டும்.
சிறையில் இருந்த 40 நாட்களுக்குக்கூட ஊதிய இழப்பு எதுவும் இல்லாமல் பாதுகாத்த அமைப்புதான் ஜாக்டோ,ஜாக்டீ அமைப்புகளாகும்.1 3/4 லட்சம் பேரை நிரந்தர பணி நீக்கம் செய்த போதும் மீண்டும் பணி அமர்த்திய அமைப்புதான் இந்த ஜாக்டோ அமைப்பாகும். 7 1/2 மாதங்கள் நிரந்தர பணி நீக்கத்தில் இருந்தவர்களையும் மீண்டும் பணியில் அமர்த்தி பாதுகாத்த அமைப்புதான் இந்த ஜாக்டோ அமைப்பாகும். சக்திமிக்க ஜாக்டோஅமைப்பு உங்களை அன்புடன் அழைக்கிறது.கோரிக்கை பரணிபாடி மறியல் போரில் பங்கேற்போம் வாரீர் வாரீர்.

Friday, 22 January 2016

ஜனவரி 30 ,31, பிப்ரவரி 1ம் தேதிகளில் தொடர்மறியல் போராட்டம் மதுரை மாவட்ட ஆசிரியர்கள் முழுமையாய் பங்கேற்க முடிவு

மதுரை ஜாக்டோ அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் 21.10. 16 அன்று  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அனைவரும் தொடர்மறியல்  வரும் 30,31,1 தேதிகளில் பங்கேற்க செய்வது என்றும் அடுத்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று போராட்ட நிகழ்வை விளக்கி பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரும்போது அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பேச உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நமது நண்பர்களிடம் இதுபற்றி பேசி தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தொடர்மறியல் பங்கேற்க செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Wednesday, 20 January 2016

மதுரை கலெக்டராக வீரராகவ ராவ் நியமனம்

மதுரை கலெக்டராக இருந்த எல். சுப்ரமணியன், வருவாய் நிர்வாக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டராக இருந்த வீர ராகவ ராவ், மதுரை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்

TO GET ANNUAL PAY DRAWN DETAILS FOR IT PURPOSE CLICK HERE...

Enter your details :- 
* Employee code (TPF/CPS number)
* Suffix (EDN)
* Date of birth(DD/MM/YYYY)


Get your
* pay slip
* annual salary statement
* pay drawn particulars...
 

Monday, 18 January 2016

ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம் கணக்குகளுக்கு விடிவு

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு பராமரிக்கப்பட்டது. அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது.
அதனால், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாயின் நிலை என்னவாகும் என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், சி.பி.எஸ்., மற்றும் நிரந்தர பென்ஷன் திட்டமான பி.எப்., ஆகிய, இரண்டு கணக்கு நிர்வாகத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
எனவே, சி.பி.எஸ்., கணக்குகள், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும், பி.எப்., கணக்குகள், பொது கணக்கு அலுவலக நிர்வாகத்துக்கும் சமீபத்தில் பிரிக்கப்பட்டன. அதனால், ஒரு குழப்பம் தீர்ந்தது.
ஆனாலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சி.பி.எஸ்., கணக்குகளால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் தீரவில்லை. இது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் சார்பில்
தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. எனவே, இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு கட்டப்பட்டுள்ளது.
'இரு கணக்கு வேண்டாம்'
தகவல் தொகுப்பு மைய கமிஷனரகம் பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பிந்தைய புதிய சி.பி.எஸ்., கணக்குடன், பழைய கணக்கு நிதியை இணைத்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இனி நீடிக்க கூடாது. இதற்கு, கல்வி அதிகாரிகள், மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்., கணக்குகள் ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பல கோடி ரூபாய் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், சி.பி.எஸ்., திட்டத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு, உயிரிழந்த, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான நிதி பங்களிப்பையும், தாமதமின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, 13 January 2016

01.01.2016 நிலவரப்படியான அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு,திருத்திய தேர்ந்தோர் பட்டியல்(REVISED PANEL) கோருதல்

1999 ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட  அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும்  அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)விவரம்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு   கோரப்பட்டுள்ளது

10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

இன்று 10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் :
1.திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் ஜனவரி-30.31, மற்றும் பிப்ரவரி-1 ஆகிய தேதிகளில் ஜாக்டோவின் 15 அம்சக்கொரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது
 
2.அதற்கான மாவட்டத்தலைநகரில் ஜனவரி-23 அல்லது 24 ஆகிய நாட்களில் ஆயத்தக்குட்டங்களை மாவட்ட ஜாக்டோ அமைப்பு நடத்துவது என்றும் அதில் மாவட்ட ,வட்டார,வட்ட அளவிலான ஜாக்டோ இணைப்புசங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மறியல் போராட்டம் வெற்றிபெறவும் ஆயத்தப்பணிகள் ,ஆசிரியர் சந்திப்பு இயக்கம் ஆகியன குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ  உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பர்.மற்ரும் மாநில அமைப்பின் வழிகாட்டுதல்படி அமையப்பெற்ற துண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கப்படும்
3.பள்ளிகள் தோறும் சென்று  மறியல் போராட்டத்தில் திரளான ஆசிரியர்களை பங்கேற்கும் வகையில் ஆசிரியர் சந்திப்பு இயக்கம்  ஜனவரி-26,27,28 ஆகிய தேதிகளில் நடத்தப்படவேண்டும்.
4.அப்போது மறியல் போராட்டத்தில் பங்கேற்க ஏதுவாக ஜாக்டோ அமைப்பில் பெயரில் ஒப்புதல் படிவம் பெறப்படல் வேண்டும்
5 ஜனவரி30அன்று நடத்தப்படும் முதல் மறியல் நாளில் மிகப்பெரும்பான்மையான் ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்
6. ஜனவரி -30 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான தலைவர்கள்  ஏற்பார்கள்
7. அடுத்த நாளான ஜனவரி -31 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப்பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான பொருளாளர்கள்  ஏற்பார்கள்
8.இறுதி நாளான பிப்ரவரி-1 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை  ஜாக்டோ அமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் மாவட்ட ,வட்ட,வட்டார அளவிலான செயலாளர்கள்  ஏற்பார்கள். மறியல் விளக்க உரை மூன்று நாட்களும் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ,மற்றும் மாவட்ட ஜாக்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்பர்.           ஆசிரியர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் திட்டமிட்டு பணியாற்றவேண்டும் என ஜாக்டோ மாவட்ட,வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Sunday, 10 January 2016

JACTTOசார்பில் வரும் ஜன 30,31 பிப் 1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.

2011 சட்டசபைத் தேர்தலின்போது இப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்  புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு, பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்தார்   அறிவித்து 5 ஆண்டுகளாக பலவித போராட்டம் நடத்திவிட்டோம் அதைப்பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் * அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தியாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும். * அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் அவ்வப் போது நிறைவு செய்யப்படும்.* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும். என கூறப்பட்டுள்ளது
ஆனால் பேச்சு வார்த்தை மூலம்  தீர்க்கப்படும் என கூறிவிட்டு ஒருமுறைக்கூட அழைக்கவில்லை.
தேர்தல் வரும் போதுதான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள்.அவர்கள் வெற்றிக்கு நாம் தேவைப்பட்டோம் அறிவித்தார்கள். வெற்றி பெற்றபின் மறந்தார்கள். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை.புரிந்துகொள்ளுங்கள். நமது நிலைப்பாட்டை  தெரிவிக்கவே இந்த JACTTO மறியல்.

JACTTOசார்பில் வரும் ஜன 30,31 பிப் 1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். அனைவருக்கும் தெரிவிப்போம்,கலந்து கொள்வோம், கலந்து கொள்ளச்செய்வோம்

JACTTOசார்பில் வரும்Jan 30,31 feb1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம் என திருச்சியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

JACTTO சார்பில் வரும் ஜன 30,31 பிப் 1,ஆகிய 3நாட்கள் தொடர் மறியல் ஆர்ப்பாட்டம்,மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என திருச்சியில் இன்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
Jan23,24:மாவட்ட கூட்டங்கள்.
Jan27,28,29:உறுப்பினர் ஆயத்தப்படுத்தும் சந்திப்பு நடைபெறும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

Saturday, 9 January 2016

தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணி- 01.01.2016 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/முதுகலை மொழி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் - 1998 ஆண்டுவரை பணியில் சேர்ந்தவர்கள் விவரம் கேட்கப்பட்டுள்ளது

 1.1.2016 ன்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குதகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் விவரத்தினை இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி தயார் செய்து இருபிரதிகளில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில்ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிவத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்கள் கண்டிப்பாக இணைத்திடல்வேண்டும்.
1. நியமன ஆணை 2. பணிவரன்முறை ஆணை 3. தகுதிகாண்பருவம் முடித்தஆணை 4. பதவி உயர்வு பெற்றிருப்பின் பதவிஉயர்வு ஆணை 5. துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்றதற்கான அரசிதழ்கள் நகல் 6. கல்வித்தகுதி 10,12,பட்டங்கள் ஆகியவற்றின் நகல்கள் . 7. TRB  நியமனம் எனில் தர எண்ணிற்கானஆதாரம்.


விவரம் அறிய இங்கே அழுத்தவும்

Thursday, 7 January 2016

மேல்நிலைத் தேர்வு, மார்ச் 2016 - செய்முறைத் தேர்வுகள் - நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் மற்றும் படிவங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச்2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
செய்முறைத் தேர்வுகள் - நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் மற்றும் படிவங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது 
அறிவுரைகள் பார்க்க இங்கே அழுத்தவும்
தேர்வுக்கான படிவங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

Tuesday, 5 January 2016

மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் 2016 மதுரை முதன்மைக்கல்வி அலுவலருடன் சந்திப்பு விவரம்

 நமது அமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை 5.1.16 அன்று மாநில பொதுச்செயலாளர் திரு இரா.பிரபாகரன் தலைமையில் சந்தித்தோம் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் காணப்பட்ட குறைபாடுகள்  விவாதிக்கப்பட்டது  அதன் விவரம்
 31.12.15  அன்று நடைபெற்ற எமது அமைப்பின் பொதுக்குழுவின் தீர்மானங்கள் தங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது
1.செய்முறைத்தேர்வில் கடந்த ஆண்டு இரு பகுதிகளாக நடத்தப்பட்டது. பள்ளிகள் தங்களுக்குள்ளாகவே அட்டவணை தீர்மானித்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. அதை தவிர்த்து முதன்மைக்கல்வி அலுவலகமே அட்டவணை தயாரித்து அனுப்பப்படவேண்டும்
2. செய்முறைத்தேர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது பயணப்படி இல்லாதால் 8 கீ.மீக்குள் நியமிக்கப்படவேண்டும்.
3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை செய்முறைத் தேர்வுக்கு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பின்னரே பதின்மப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்
4. அரசுப் பொதுத் தேர்வுக்கான பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது 15 கி.மி க்குள் நியமிக்கப்பட வேண்டும்
5. துறை அலுவலர், பறக்கும் படை உறுப்பினர் நியமனத்தின் போது பதவிமூப்பு
அடிப்படையில் நியமித்தல் வேண்டும்
6. பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி
இயக்குநர்களையே நியமிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது.
7. கடந்த ஆண்டு மேலூர் கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை பதின்ம பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது. எமது அமைப்பு சுட்டிக்காட்டியது அது தவிர்க்கப்பட வேண்டும்
8. உடல் நலக்குறைவு போன்ற உரிய காரணங்கள் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.

9. XIம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான உழைப்புதியம் பலவருடங்களாக உயர்த்தப்படவில்லை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்

10. செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து பள்ளிகளில் இருந்து வழங்கிவிட்டு பின்னர் பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.ஆனால் அரசுப்பள்ளிகளில் நிதி இல்லை என்று காரணம் காட்டி வழங்கப்படுவதில்லை. தேர்வு முடிந்தவுடனே வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

11. உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான உழைப்புதியம் ஒவ்வொரு ஆண்டும் தாமதமாக வழங்கப்படுகிறது அது தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

மேல்நிலை பொதுத்தேர்வு சிறப்பாக நடைபெறவும் இடர்பாடுகளை களையவும் நமது மாவட்டம் மாநில அளவில் முன்னிலை பெறவும் எமது அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதை இந்த பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான
பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 04ம் தேதியில் துவங்கி ஏப்ரல் 1ம் தேதி நிறைவடைய உள்ளது.
 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெறுகிறது



பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி: நாளை முதல் விற்பனை,எங்கெங்கு கிடைக்கும்?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இது போல நிகழாண்டுக்கான வினா வங்கி, தீர்வுப் புத்தகங்கள் வியாழக்கிழமை (ஜன.7) விற்பனை செய்யப்பட உள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
பிளஸ் 2 வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள்தமிழ், ஆங்கில மொழிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 25 முதல் ரூ.100 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு வினா வங்கி ஆங்கில வழியில் ரூ. 175 என்ற அளவிலும், தமிழ் வழியில் ரூ. 180 என்ற அளவிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கு தீர்வுப் புத்தகம் ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விலை ரூ. 15 ஆகும்.

சென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.

காஞ்சிபுரம்- குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

திருவள்ளூர்- ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

கடலூர்-மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
விழுப்புரம்- பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தஞ்சை- மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,
நாகப்பட்டினம்- சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி,
திருவாரூர்- அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி,
மதுரை- வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி,
தேனி- என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திண்டுக்கல்- பழனி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளியிலும்,
விருதுநகர்- த.பெ.ந.மகளிர் மேல்நிலைப் பள்ளி,
சிவகங்கை - மதுரை ரோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி,
திருநெல்வேலி - அரசு மேல்நிலை பள்ளியிலும் (ரத்னா திரையரங்கு எதிரில்),
தூத்துக்குடி- லசால் மேல்நிலைப் பள்ளி,
கன்னியாகுமரி- நாகர்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி,
வேலூர் - வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி,
திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப் பள்ளி,
சேலத்தில் மறவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி,
நாமக்கல் - ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி,
தருமபுரி - அதியமான் அசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி,
கரூர் - கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு     உயர்நிலைப் பள்ளி,
பெரம்பலூர் - வெங்கடேசபுரம் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி,
புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி,
கோவை - ராஜ வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
உதகை- குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,
கிருஷ்ணகிரி - பெங்களூர் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர் - விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 

Sunday, 3 January 2016

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்:தமிழக அரசு அறிவிப்பு அரசாணை வெளியீடு


தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-
ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-

ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர்
அறிவித்துள்ளார்.

இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாகவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்  

Friday, 1 January 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2016

புத்தாண்டு முன்னிட்டு நமது அமைப்பின் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் இணை இயக்குனர் (கள்ளர்),முதன்மைக் கல்வி அலுவலர்  மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படங்கள்



தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக (TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே .மணிவாசகன் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன், JD HSS  திரு. முத்து பழனிசாமி, JD Secondary திரு, நரேஷ், JD Personal,  திரு.கருப்பசாமி , JD Vocational திரு. பாஸ்கர் சேதுபதி, JD NSS திரு.பொன்னையா, Director, SCERT திரு. ராமேஸ்வர முருகன்,   அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திருமதி. வசுந்தரா தேவி , JD திருமதி. சசிகலா, JDதிருமதி. லதா, SSA இயக்குனர் திரு.அறிவொளி ஆகியோரை நமது மாநில தலைவர் திரு.வே .மணிவாசகன் , மாநில பொருளாளர் திரு. கிருஷ்ணன் ஆகியோர்  சந்தித்து   புத்தாண்டு வாழ்த்து
தெரிவித்தார்