பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Monday, 6 July 2015

முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

அனைத்து நிலை அரசுப்பள்ளி  ஆசிரியர்களுக்கான இடமாறுதல்  கலந்தாய்வு, மே மாதத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இதுவரை நடத்தப்படாமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பல தலைமையாசிரியர் பணியிடங்களும் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது.  ஆகவே இந்த ஆண்டுக்கான கலந்தாய்வை நடத்தும் பொழுது, 2015-16ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளின் பெயர்களையும் அறிவித்து, அதற்கு தோற்றுவிக்கப்படும்  பணியிடங்களையும் கருத்தில் கொண்டு , காலி பணியிடங்களை முறையாக அறிவித்து, முதலில் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும்  முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் என்ற முறையில், ஒளிவுமறைவின்றி,  எவ்வித முறைகேடும் இல்லாத வகையில், முதுகலை ஆசிரியர்களுக்ககான கலந்தாய்வை விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.  
  இங்ஙனம்
 வே.மணிவாசகன்
    மாநிலத் தலைவர்